தமிழகத்தில் இன்று 775 பேருக்கு கொரோனா
1 min read
775 people have corona in Tamil Nadu today
13.8.2022
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 775 பேராக குறைந்தது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (13ந் தேதி) 775 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,58,029 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,067 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,12,316 ஆக உயர்ந்து உள்ளது. இன்று (சனிக்கிழமை3) கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 38,033 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு குறைவாக காணப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை ) 156 ஆக இருந்த நிலையில் இன்று சென்னையில்147 ஆக குறைந்து உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,680 ஆக உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.