May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கென்யாவின் 5வது அதிபராக வில்லியம் ரூட்டோ பதவியேற்றார்

1 min read

William Ruto is sworn in as the 5th President of Kenya

13.9.2022
கென்யாவின் 5வது அதிபராக வில்லியம் ரூட்டோ பதவியேற்றார்.

கென்யா

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5வது அதிபரக பதவியேற்றார். இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த கென்யா சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தது. கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு கென்யாட்டாவின் துணை அதிபராக வில்லியம் ரூட்டோ இருந்தார்.
இந்த நிலையில் இருவருக்குமிடையே எழுந்த மனக் கசப்பால் ஒருவருக்கொருவர் மாதக் கணக்கில் பேசாமல் இருந்தனர்.
இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இருவரும் கைகுலுக்கி பேசிக் கொண்டது மக்களிடையே மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.