ஆதிச்சநல்லூரில் கிடைத்த அதிசய பொருட்கள்
1 min read
Miraculous products found in Adichanallur
27.9.2022
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மேலும் பல அதிசய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆதிச்சநல்லூர்
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மூன்று இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை 85க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் என ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன.
மேலும், அகழாய்வின் போது அதிசயமான வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவம், இரும்பு வாள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.