இந்தியாவில் புதிதாக 2,756 பேருக்கு கொரோனா
1 min read
2,756 new cases of corona in India
9.102022
இந்தியாவில் புதிதாக 2,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரத்துக்கு கீழே வந்து விட்டது. புதுடெல்லி, இந்தியாவில் நேற்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து 2,797 ஆனது. இன்று ஒரே நாளில் 2,756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,756 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,12,013 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 29,251 லிருந்து 28,593 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கு கீழே வந்து விட்டது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5,28,799 ஆக உயர்ந்துள்ளது.