June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

குமரி அனந்தனுக்கு மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதி

1 min read

Kong. Senior leader Kumari Ananthan suffers asphyxiation – admitted to hospital

9.10.2022
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமரிஅனந்தன்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவையின் நிறுவனத்தலைவருமாக இருந்து வருபவர் குமரி அனந்தன். இவருக்கு வயது 90. இந்த நிலையில், குமரி அனந்தனுக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், குமரி அனந்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குமரி அனந்தனின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது குமரி அனந்தன் நலமாக இருப்பதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *