இந்தியா, தமிழக அளவில் கொரோனா நிலவரம்
1 min read
Corona situation in India, Tamil Nadu
25.10.2022
இந்தியா அளவிலும், தமிழக அளவிலும் கொரோனா நிலவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,44,938 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22,549 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,93,409 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,980ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று மட்டும் 23,791 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில்…
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய பாதிப்பும் நேற்றை விட சரிந்து 187 ஆக பதிவாகியுள்ளது. நேற்று ஒருநாள் பாதிப்பு 198-ஆக இருந்தது. தமிழகத்தில் இன்றைய நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ஆண்கள் 109, பெண்கள் 78 என மொத்தம் 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 49 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 390- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,736- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.