May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

வேலை வழங்குவதாக கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழிப்பு-அந்தமான் முன்னாள் தலைமைச் செயலாளர் மீது புகார்

1 min read

Complaint against former chief secretary of Andaman for raping more than 20 women on the pretext of providing them with jobs

27.10.2022
அந்தமானில் வேலை வழங்குவதாக கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது.

கற்பழிப்பு

அந்தமான்- நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் பதவிக் காலத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்து சென்றதாகவும். அவர்களில் சிலருக்கு பாலியல் ஆதாயத்திற்கு பதிலாக வேலையும் வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக 21 வயது பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார். நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எல். ரிஷி ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார். அந்த பெண் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

வேலை தேடியபோது ஓட்டல் உரிமையாளர் மூலம் தொழிலாளர் ஆணையர் ரிஷிக்கு அறிமுகமானேன். ரிஷி என்னை தலைமைச் செயலாளரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு மதுபானம் வழங்கப்பட்டது. ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து, அந்த இரண்டு பேரால் நான் கொடூரமாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்.

இவ்வாறு குற்றம் சாட்டி உள்ளார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அதே போல் பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று மிரட்டப்பட்டதாகவும் அந்தப் பெண் கூறினார்.

இடைநீக்கம்

அக்டோபர் 17 அன்று உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நரேன் இடைநீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 14 வரை இடைக்கால ஜாமின் பெற்றார். ரிஷியும் இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் அவரது பெயரில் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தலைமைச் செயலாளரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவின் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரின் ஹார்ட் டிஸ்க் முதலில் அழிக்கப்பட்டது. அதன் பிறகு, ஜூலை மாதம் அவர் போர்ட் பிளேயரில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட நேரத்தில் அது அகற்றப்பட்டது.
நரேன் உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான் நிகோபார் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதங்களில் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். எப்ஐஆரில் கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளில் ஒன்றில் தான் போர்ட் பிளேயரில் தான் இருந்ததாக கூறி உள்ளார். மேலும் புதுடெல்லியில் தான் இருந்ததை நிருபிக்க விமான டிக்கெட்டுகள் மற்றும் சந்தித்தவர்கள் பட்டியலை மேற்கோள் காட்டியுள்ளார்.
தலைமைச் செயலாளரின் ஊழியர்கள் உள்பட முக்கிய சாட்சிகள் அளித்த சாட்சியங்களில் அவரது வீட்டிற்கு பெண்களை அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர், “பெண்களை அழைத்துச் செல்ல” அறிவுறுத்தப்படுவதாகவும், உள்ளூர் உணவகத்தில் இருந்து உணவை எடுத்துச் செல்லவும், தலைமைச் செயலாளரின் வீட்டில் பரிமாறவும், பின்னர் பெண்களை இறக்கிவிடுமாறும் அறிவுறுத்தப்படுவதாக விசாரணையில் தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.