May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர், மோடி புகைப்படத்தை வைக்க கோரிக்கை

1 min read

Request to put Ambedkar, Modi photo on currency notes

27.10.2022
ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் மோடி படத்தையும் வைக்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

ரூபாயில் கடவுள் படம்

புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றுமுன்தின் தெரிவித்தார்.
இதற்கிடையில், மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் என்பவர் ‘பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும்’ என கூறினார்.

அம்பேத்கர்

ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி படமும், மறுபக்கம் அம்பேத்கர் படத்தையும் அச்சிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில், புதிதாக அச்சடிக்கப்படவுள்ள இந்திய ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது? ஒருபுறம் காந்தியும், மறுபுறம் அம்பேத்கரின் புகைப்படமும் அச்சிட வேண்டும். சமத்துவம் பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளுமை அம்பேத்கர், அவர் படத்தை ஏன் ரூபாய் நோட்டுகளில் அச்சிடக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ளார்.

மோடி

ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும்
பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்

மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் என்பவர் ‘பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும்’ என கூறினார். அதனை வலியுறுத்தும் விதத்தில், பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை போட்டோஷாப் மார்பிங் செய்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் மாபெரும் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? அவர் உலகம் முழுவதும் நாட்டைப் பெருமைப்படுத்துகிறார். இந்தியாவை மேன்மை அடையச் செய்ய மோடியின் முயற்சியை இந்தியா மட்டுமின்றி, உலகமே நினைவு கூரும்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.