சினிமா ஆசைகாட்டி 9 பெண்களை, விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது
1 min read
2 people arrested for engaging in prostitution of 9 women in cinema
5.11.2022
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக 9 பெண்களை ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்திய இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
சினிமாவில் நடிக்க
சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி விபசாரத் தொழிலில் ஈடுபட வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருவல்லிக்கேனி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடத்திய பிரகாஷ் மற்றும் ஏசு ஆகிய இருவரை போலீசார் கைதுசெய்தனர். மேலும், இருவரும் கட்டாயப்படுத்தி விபசாரத் தொழிலில் ஈடுபடுத்திய 9 பெண்களை பத்திரமாக மீட்ட போலிசார், அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.