June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி – அண்ணாமலை பேச்சு

1 min read

AIADMK-led alliance in elections – Annamalai talk

7.11.2022
தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் எந்த குழப்பமும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொன்விழா

அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அண்ணாமலை

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:-

அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி என்பதால் எடப்பாடி பழனிசாமி கருத்தில் தவறில்லை. 2024 தேர்தலில் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும். எந்த கட்சி பலமானது என அப்போது தெரியும்.

பிரதமரின் தமிழகம் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பாஜக சார்பில் வரவேற்பு தரப்படும். மேலும், பால் விலை உயர்வை கண்டித்து வரும் 15-ம் தேதி பாஜக சார்பில்1,200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *