வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min read
New low pressure area forming over Bay of Bengal tomorrow- India Meteorological Department informs
15.11.2022
வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு எனவும் ,நவம்பர் 19ம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 நாட்கள்…
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 16-11-2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17-11-2022 மற்றும் 18-11-2022 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19-11-2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது