June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் கைது

1 min read

15 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

28.11.2022
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மீனவர்கள்

புதுக்கோட்டையில் இருந்து 3 படகுகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்று இலங்கை கடற்படையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *