May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு- ஆன்லைன் ரம்மி அவரச தடை சட்டம் ப்றறி பரபரப்பு பேட்டி

1 min read

Annamalai meeting with the Governor- A sensational interview about the Online Rummy Prohibition Act

29.11.2022
ஆன்லைன் ரம்மி அவரச தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தும் தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்தவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
ஆன்லைன் ரம்மி

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கவர்னர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மி தடைசட்டம் பற்றி கவர்னரிடம் பாஜக கருத்தை வலியுறுத்தியுள்ளோம். சகோதர, சகோதரிகள் ஆன்லைன் ரம்மியில் அடிமையாகி உயிரை மாய்த்துக்கொள்வதை எந்த காரணத்திலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் ரம்மி அவரச தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்தார். அந்த அவசர சட்டத்தை இதுவரை தமிழ்நாடு அரசு நடைமுறை படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஆன்லைன் தடைசட்டம் காலாவதியாகிவிட்டது என்று தமிழ்நாடு அரசு இன்று கூறுகின்றது. ஆனால், அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தபிறகு இத்தனை காலமாக தமிழ்நாடு அரசு ஏன் நடைமுறைபடுத்தவில்லை? அவரச சட்டத்திற்கு கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு அரசாணை கூட தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. அப்படி கூறவேண்டுமானால், அவசர சட்டத்தில் கவர்னர் கையெழுத்திட்ட உடன் கூட தமிழ்நாடு அரசை பொறுத்தவரை நம்மை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டம் நடந்துகொண்டு தான் இருந்தது. ஏனென்றால் தமிழ்நாடு அரசு அதை நடைமுறைபடுத்தவில்லை.
அவரச சட்டம் கொண்டுவரும்போது அது கவர்னரின் பார்வைக்கு வரும்போது அவர் பல கருத்துக்களை பார்க்கிறார். மாநில அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு மாநில அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் என்பது சைபர் பகுதி. அது முழுமையாக மத்திய அரசின் மத்திய பட்டியலில் வருகிறது. அதனால், அதற்கு மாநில அரசுக்கு அனுமதி இருக்கா? என்ற கேள்வி வருகிறது. எந்த மாநிலத்திலேயுமே சைபர் பகுதிக்குள் மாநில அரசு செல்லவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் மத்திய அரசுக்கு முழு சுதந்திரம், அதிகாரம் இருக்கக்கூடிய பகுதிக்குள் மாநில அரசு ஒரு சட்டம் இயற்றியுள்ளனர்.
இதற்கெல்லாம் கவர்னர் அலுவலகத்தில் இருந்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தெரிகிறது. மாநில அரசும் சில விளக்கங்களை கொடுத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக முடக்கப்படவேண்டும். சட்டம் என்பது சரியாக இருக்கிறதா? அரசியலமைப்பு சட்டத்தை சார்ந்து இருக்கிறதா? மத்திய-மாநில அரசுக்கும் இடையே வகுத்துள்ள அதிகாரம் சரியாக வகுக்கப்பட்டுள்ளதா? இதை பார்க்கவேண்டிய கடமை கவர்னருக்கு உள்ளது. தவறாக இயற்றப்பட்ட சட்டம், சட்டமே இயற்றப்படாததற்கு சமம் என்று கூறுகிறோம். இதனால், மொத்தாம்மொதுவாக கவர்னர் வேலைசெய்யவில்லை,கவர்னர் இதில் கையெழுத்து போடவேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.