June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்குக்கு பா.ஜனதாவில் உயர் பதவி

1 min read

Former Punjab Chief Minister Amarinder Singh gets top job in Janata Party

3.12.2022
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்குக்கு பா.ஜனதாவில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமரீந்தர் சிங்

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-மந்திரியாகவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் அமரீந்தர் சிங். கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது அவருக்கு பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இதைப்போல பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்து பின்னர் பா.ஜனதாவுக்கு தாவிய மற்றொரு மூத்த தலைவரான சுனில் ஜாக்கரும், பா.ஜனதா தேசிய செயற்குழுவில் இடம்பிடித்து உள்ளார். இவர்களைத்தவிர உத்தரபிரதேச மந்திரி சுவாதந்திர தேவ் சிங்குக்கும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான ஜெய்வீர் ஷெர்ஜில், பா.ஜனதாவின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதைப்போல தேசிய செயற்குழுவுக்கான சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட மேலும் சில மூத்த நிர்வாகிகள் இன்று நியமிக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.