June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவிற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு

1 min read

Opposition strongly opposes General Civil Law Personal Bill

10/12/2022
மாநிலங்களவை பாஜக எம்பி கிரோடி லால் மீனா அறிமுகம் செய்த பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவிற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுசிவில் சட்டம்

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக அரசு முயற்சித்து வருகிறது. பொது சிவில் சட்டம் தொடர்பான விசாரணைகள் சுப்ரீம் கோர்ட்டிலும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்ட தனிநபர் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் பாஜக எம்பி கிரோடி லால் மீனா மசோதாவை அறிமுகம் செய்த போது, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.

வாக்கெடுப்பு

இதனால் மசோதாவை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் 63 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராகவும், 23 பேர் ஆதரவாகவும் வாக்களித்ததால் மசோதாவை தாக்கல் செய்வது தோல்வியடைந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *