கடையத்தில் பாரதியார் 141 வது பிறந்த தின விழா
1 min read
Bharathiar’s 141st birthday celebration at the shop
11.12.2022
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பாரதியாரின் 141 வது பிறந்த தின விழா இன்று நடைபெற்றது.
கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடையம் திருவள்ளுவர் கழகத்தின் சார்பாக செல்லம்மாள் பாரதி திருவுருவச் சிலைக்கு திருவள்ளூர் கழக தலைவர் சேதுராமலிங்கம், செயலாளர் கல்யாணி சிவகாமி நாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
ஆழ்வார்குறிச்சி திருவள்ளூர் கழகத்தின் சார்பாக பணி நிறைவு ஆசிரியர் மாடசாமி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.. ஆழ்வார்குறிச்சி கல்லூரி பேராசிரியர் மற்றும் பள்ளிச் செயலாளர் சுந்தரம, செல்லம்மாள் பாரதி சிலைக்கு மாலை மரியாதை செய்தார்கள். கடையம் பாரதி அரிமா சங்கத்தின் சார்பாக கோபால், முருகன், குமரேசன், இந்திரஜித் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
கடையம் முத்தமிழ் கலா மன்றம் அமைப்பாளர் கவியரசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். விழா நிகழ்ச்சிகளில் ஆசிரியர் மன்னன் கல்லூரி பேராசிரியர் கல்யாண ராமன் கல்யாண சுந்தரம் ராமானுஜம் பணி நிறைவு வட்டாட்சியர் சின்னச்சாமி ஆகியவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிகழ்ச்சிகளை சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தான் ஏற்பாடு செய்திருந்தார்.