June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டாம்; சரத்குமார் சொல்கிறார்

1 min read

Rummy is an intellectual game; Sarathkumar says

13.12.2022
ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டு என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

மதுவிலக்கு போராட்டம்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் சென்னை எழும்பூரில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
போதைப் பொருட்கள் பள்ளி சிறுவர்களை சென்றடைவது வருத்தமாக உள்ளது. ஆரோக்கியம் இருந்தால் தான் சிறந்த குடிமகனாக வாழ முடியும். இந்தியா மனித வளம் உள்ள நாடு. மனித வளத்தை நாம் பேணி காக்க வேண்டும்.

அறிவுப்பூர்வமான விளையாட்டு

ரம்மி விளையாடுவது அறிவுப்பூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாட அறிவு வேண்டும். ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள். நான் சொன்னால் மட்டும் மக்கள் விடுவார்களா ? . ஓட்டு போடுங்கள் என்றும் சொல்றேன் ஆனால் மக்கள் கேட்கிறார்களா ?. குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மிக்காக தற்கொலை என்கின்றனர்.
ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம் வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்துவிட்டேன்.
ஆன்லைன் ரம்மியை தடுக்க சட்டம் இயற்றுவது அரசின் பணி.
இவ்வாறு அவர் கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *