கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை
1 min read
Agni-5 intercontinental ballistic missile test
16.12.2022
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஒடிசாவில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை சோதனை
அணு ஆயுதங்களை சுமந்து சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டரில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 பெல்லஸ்டிக் ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஒடிசாவில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இருந்து மாலை 5.30 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் சென்று, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் தன்மை கொண்டது. அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய – சீன வீரர்கள் மோதிக் கொண்ட இந்த சூழ்நிலையில், இரவு நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை இந்திய ராணுவம் சோதனை செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
–==
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் தினத்தந்தி டிசம்பர் 16, 8:19 am Text Size மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்று வருகிறது. மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், தனித்தனியாக தேர்கள் போன்ற சப்பரங்களில் எழுந்தருளி காட்சி அளித்து வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. சப்பரம் கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடையும். இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.