June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டும் பாஜக பதிலடியும்

1 min read

Rajiv Gandhi Foundation receives funds from Communist Party of China- BJP alleges

17.12.2022
ராகுல்காந்தி சீன ஊடுருவல் குறித்து மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார். அதற்கு சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியிடமிருந்து நிதி பெற்றுள்ளதாக பாரதீயஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

ராகுலகாந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாதயாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, சீனா முழு போருக்கு தயாராகுவதாகவும், இந்திய அரசு தூங்குவதாகவும் தெரிவித்தார். மேலும், 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றிவிட்டதாகவும்’ அவர் தெரிவித்தார்.

பாஜக பதிலடி

சீனாவுடனான போர் குறித்து ராகுல்காந்தியின் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறியதாவது:-

சீனாவுடன் நெருக்கம் உள்ளதாக ராகுல்காந்தி உணர்கிறார். சீனா என்ன செய்யும் என்பதை அறியும் அளவிற்கு அவர் நெருக்கம் வைத்துள்ளார். இந்திய பாதுகாப்பு மற்றும் எல்லை பகுதி குறித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், இந்திய வீரர்களின் துணிவை குறைக்கும் வகையிலும் ராகுல்காந்தி கருத்து தெரிவித்து வருகிறார்.

நிதி

ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தா நேருவின் இந்தியா இதுவல்ல. (1962 இந்தியா-சீனா மோதலை மேற்கோள்காட்டி) தூங்கிக்கொண்டிருந்தபோது 37 ஆயிரத்து 242 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இழந்தது யார்?. தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள ராகுல்காந்தி தேசிய பாதுகாப்பு குறித்து பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியிடமிருந்து நிதி பெற்றுள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது எண்ணற்ற பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *