May 24, 2024

Seithi Saral

Tamil News Channel

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோற்சவ விழா தேரோட்டம்

1 min read

Mahakotsava festival procession at Ayyappan temple in Achanko

29.12.2022
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மகோற்சவ விழா தேரோட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் அச்சன்கோவிலில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐயப்பன் அரசராக இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மகோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அச்சன்கோவில் மண்டல மஹோற்ஷவ விழா பத்து நாட்கள் நடைபெற்றது.. முதல் நாள் புனலூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கருவூல ஸ்டாங்ரூமில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கபட்டு பின் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மெம்பர் ஆரம்பித்து வைக்க திருவாங்கூர் தேவசம்போர்டு உதவி ஆனையர் உண்ணிகிருஸ்ணன் தலைமையில் யானை முன் செல்ல பஞ்சவாத்தியம் முழங்க கேரள காவல்துறை பாதுகாப்பில் திருஆபரணபெட்டி ஊர்வலம் ஆரம்பமாகி தென்மலை, ஆரியங்காவு, வழியாக தமிழக எல்லை வந்தடைந்தது பின் அங்கிருந்து தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசி கொண்டு வரபட்டது..

அனைத்து ஊர்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருஆபரணபெட்டியை வரவேற்று தரிசனம் செய்தார்கள் பின் பன்பொழி, மேக்கரை வழியாக மாலை 5 மணி அளவில் அச்சன்கோவில் ஊர் எல்லையை வந்தடைந்தது.. அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லபட்ட திருஆபரணபெட்டி 6.30 அளவில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாரதணை நடைபெற்றது..

மறுநாள் 17- 12 – 2022 அன்று 1 ம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. சபரிமலை தந்திரி மகேஷ் மோகனர் கொடியேற்றி வைத்தார்

2, 3, 4, 5 திருவிழா முறையே டிசம்பர் 18, 19, 20, 21 தேதிகளில் உற்ஷவபலி பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கலந்து கொண்டார்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அச்சன்கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தார்கள்..

6, 7, 8 திருவிழா முறையே டிசம்பர் 22, 23, 24 தேதிகளில் கருப்பன் துள்ளலுடன் நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் கோவில் தேவசம் சார்பாக சிறப்பு பூஜைகளும், மாலை கோவில் கமிட்டியினர் சார்பாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது..

9 ம் திருவிழாவான டிசம்பர் 25 ம் தேதி அன்று கேரளத்தில் எங்கும் இல்லாத வகையில் தேரோட்டம் நடைபெற்றது.. அன்று மட்டும் சுமார் ஒரு லட்சத்து இருபத்தி இரண்டாயிரம் பேர் அச்சன்கோவில் வருகை தந்துள்ளனர் என்று அச்சன்கோவில் காவல்துறை கூறியுள்ளனர்..

10 ம் திருவிழாவான டிசம்பர் 26 திங்கள்கிழமை முக்கிய திருவிழாவான சுவாமிக்கு ஆராட்டு நடைபெற்றது.. சுவாமி யானை மேல் எழுந்தருளி ஊர் எல்லையில் உள்ள ஆராட்டு கடவில் ஆராட்டு நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆணையாளர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்..

டிசம்பர் 27 ம் தேதி மண்டல மஹோற்ஷவ விழா நடைபெற்றது.. சுவாமிக்கு சிறப்பு மண்டல பூஜை நடைபெற்றது..

அதை தொடர்ந்து டிசம்பர் 28 ம் தேதி காலை 9 மணி அளவில் பூஜைகள் செய்து புறப்பட்டு கானக பாதை வழியாக புனலூரில் உள்ள கிருஷ்ணன் கோவில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கருவூலமான ஸ்டாங்ரூமில் திருஆபரணபெட்டி ஒப்படைக்கப்பட்டது..
அப்போது திருஆபரணபெட்டி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த திருஆபரணபெட்டி கமிட்டி தமிழ்நாடு தலைவர் ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கோவில் கமிட்டி சார்பாக பாராட்டினார்கள் அப்போது கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உதவி ஆனையர் மற்றும் கமிட்டியினர்.கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.