May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைய கோட்ட கண்காணிப்பாளர் அழைப்பு

1 min read

Online Line Supervisor Call in Postal Life Insurance Scheme

29/12/2022
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடானது குறைந்த பிரீமியத்தில் அதிக போனசை வழங்குகிறது. எனவே பொதுமக்கள் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன் பெற வேண்டுமென கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார.

தென்காசியில் கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடானது குறைந்த பிரீமியத்தில் அதிக போனசை வழங்குகிறது. இது வரை இந்த அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலர்களு க்கும், பாதுகாப்பு துறை அலுவலர்கள், துணை ராணுவ அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு சார்ந்த ஊழியர்கள், அரசு உதவி பெரும் கல்வி நிலைய ஊழியர்கள். பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள், இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள், தன்னாட்சி அமைப்பு சார்ந்த ஊழியர்கள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் மற்றும் அஞ்சல் துறையில் உள்ள புற நிலை ஊழியர்கள் மட்டும் சேரும்படியாக இருந்தது. தற்போது அனைத்து பட்டதாரிகளும் டிப்ளமோ படித்தவர்களும், மற்றும்
தொழில் முறை கல்வி பயின்றவர்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்ற அறிவிப்பை அஞ்சல் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

மேலும் பாலிசி தொடங்கிய பின்பு அதற்கான பிரீமியத்தை செலுத்த இனி அஞ்சலகம் நேரடியாக செல்லவோ அல்லது வரிசையில் காத்திருக்கவோ தேவையில்லை.
பாலிசிகளுக்கான மாதாந்திர ப்ரீமியத்தை அதற்கான இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும், அஞ்சலக ஏடிஎம் மூலமாகவும், பாலிசிதாரர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு அல்லது இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி கணக்கு இருப்பின் அவற்றிலிருந்து தானியங்கு முறையில் பரிமாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. எனவே அனைத்து பயனாளிகளும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர அருகிலுள்ள அஞ்சலகங்கள் அல்லது வளர்ச்சி அலுவலரை தொலைபேசி எண் 8300756201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.