தாயை தகனம் செய்த 1 மணி நேரத்தில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி
1 min readModi attended a public event within 1 hour of his mother’s cremation
30.12.2022
தாயை தகனம் செய்த 1 மணி நேரத்தில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி சோகத்தை மறைத்து வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
மோடி
மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஹவுரா-நியூ ஜல்பை குறி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மேற்கு வங்காளத்தில் பல்வேறு திடங்களையும் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலையில் காலமானார். இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
காணொலி மூலம்…
இதைத்தொடர்ந்து தனது தாயாரின் இறுதி சடங்குகளை முடித்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர், காணொலி மூலமாக மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், ரூ.5,800 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், மேற்கு வங்காளத்தில் ரூ.7,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.2,500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தாயார் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் சோகத்தை மறைத்து திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.