May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

1 min read

Opening of Sabarimala temple walk for Makaravilakku Puja

30.12.2022
மகர விளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

மகர விளக்கு

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ந் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன் பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு நேற்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு இருந்தனர். இன்று முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
நிலக்கல்-பம்பை, பம்பை- நிலக்கல் இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதே போல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.