May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை

1 min read

Addition of artificial colors to basmati rice is prohibited

12/1/2023
பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாஸ்மதி அரிசி

அரிசி வகைகளில் பாஸ்மதி அரிசிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. முக்கியமாக மக்களின் விருப்ப உணவாக கருதப்படும் பிரியாணியை தயார் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் அரிசி வகைகளில் இது முதல் இடத்தில் உள்ளது.
நீளமான மற்றும் அதிக மணம் கொண்ட இந்த அரிசி மூலம் செய்யப்படும் உணவுப்பொருட்களை மக்கள் அதிகம் விரும்பி உட்கொள்வர். இந்த அரிசி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பாஸ்மதி அரிசியின் நறுமணத்தை கூட்டுவதற்காகவும், நிறத்தை மேம்படுத்தவும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டு வருகிறது.

தடை

இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தவும், நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்காகவும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க முதல் முறையாக இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உள்ளது. இந்த உத்தரவின் படி, பாஸ்மதி அரிசியானது அதன் இயற்கையான நறுமணப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும், செயற்கை வண்ணம், பாலிஷ் செய்தல், செயற்கை வாசனை கலவைகள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த விதிமுறைகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.