June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய விரர் மாடுமுட்டி சாவு; சூரியூரில் பார்வையாளர் பலி

1 min read

Virar Madumuti died while taming 9 bulls in Palamedu Jallikkat; Bystander killed in Suriyur

16.1.2023
பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சூரியூரில் பார்வையாளர் மாடு முட்டி இறந்தார்

பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர் மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர். மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாளான இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான இன்று பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளில் அனுப்பப்பட்டனர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றனர்.

மாடு முட்டி இறந்தார்

இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அரவிந்த் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சூரியூர் ஜல்லிக்கட்டு

இதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவர் காளை முட்டியதில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *