August 8, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

1 min read

Both Houses of Parliament adjourned until Monday.

7.8.2026
தொடர் முழக்கங்களால் மக்களவை, மாநிலங்கலவை (10-ம் தேதி) திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் ஒவ்வொரு முறை கூடும்போதும், ஒவ்வொரு காரணத்தை கூறி, அதை முடக்குவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாக உள்ளது.

இந்த முறை அவர்கள், மாணவர் அமைப்பு போராட்டம், ராமர் கோவில் நன்கொடை முறைகேடு என்று வெவ்வேறு காரணங்களை கூறி போராட்டம் நடத்தி முடக்கினர்.

இப்போது மாணவர் போராட்டம் முடிந்து விட்டது. ராமர் கோவில் நன்கொடை முறைகேடு பற்றி சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்கிறது. ஆனாலும், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் காங்கிரஸ் முடக்கி வைத்திருக்கிறது. இது தொடர்பாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு நேரில் சந்தித்துப் பேசினார்.

ஆனாலும், வெவ்வெறு காரணங்களை கூறி நாடாளுமன்றத்தை தொடர்ந்து செயல்பட விடாமல் முடக்கி வருகிறது காங்கிரஸ் கட்சி. இந்தநிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் கடைசி நாளான நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *