May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

பத்ம பூஷன்-பத்மஸ்ரீ விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர், கவர்னர் பாராட்டு

1 min read

Chief Minister, Governor felicitations for Padma Bhushan-Padma Shri awardees

21.1.2023
பத்ம பூஷன்-பத்மஸ்ரீ விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர், கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பத்ம விருதுகள்

பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகி உள்ளவர்களை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகி உள்ள கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் (சமூகப்பணி), பாலம் கல்யாணசுந்தரம் (சமூகப்பணி), கோபால்சாமி வேலுச்சாமி (மருத்துவம்) ஆகிய ஆறு பேருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் உயரிய விருது பெற இருக்கும் தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவர்னர் வாழ்த்து

பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களுக்கும் மற்றும் பத்ம விருது பெற்றவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் ஆபத்தான பாம்புகளை கையாள்வதில் நமது பூர்வ குடிகள் கொண்ட அறிவின் களஞ்சியமாக விளங்குபவர்கள். ஏராளமான விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிய அரிய பாம்பு விஷங்களை சேகரிப்பதிலும் இவர்கள் உதவி உள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அண்ணாமலை

இதேபோல் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இருளர் சமுதாயத்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாம்பு பிடி நிபுணர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ பா.ஜ. க சார்பில் நன்றி களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.