துணிவு படத்தில் வந்த டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் தற்கொலை
1 min readDancer Ramesh Saijidi, the Tik Tok celebrity who appeared in Thadhavu, committed suicide
27.1.2023
டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் டான்சர் ரமேஷ், தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
டிக் டாக்
தொலைகாட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடனம் ஆடி இருக்கிறார். டிக்டாக் மற்றும் சமூக வலைதளம் மூலம் பிரபலம் அடைந்தவர் டான்சர் ரமேஷ். இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
தொலைகாட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடனம் ஆடி இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அஜித்-இன் துணிவு படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். முன்னதாக தமிழ் சினிமா திரைப்படங்களில் நடனம் ஆடி வந்த டான்சர் ரமேஷ், ரஜினிகாந்த் உடனும் திரையில் நடனம் ஆடி இருக்கிறார்.
இது தவிர ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடனம் ஆடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், டான்சர் ரமேஷ் சென்னை புளியந்தோப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.