காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப் பயணம் திடீர் நிறுத்தம்
1 min readRahul Gandhi’s walk in Kashmir comes to an abrupt halt
27.1.2023
காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ராகுல் யாத்திரை
கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர். இந்தநிலையில் காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் தொடங்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.