தென்காசி இந்தியாவில் முதல் மாவட்டமாக மாற வேண்டும்-தொழில் அதிபர் ஸ்ரீதர்வேம்பு பேச்சு
1 min readTenkasi should become the first district in India-business tycoon Sridharvembu speech
30.1.2023
தென்காசி மாவட்டம் அனைத்து துறைகளிலும் இந்தியாவில் முதல் மாவட்டமாக மாற வேண்டும் என்றும் அதற்கு தான் உறுதுணையாக இருப்பேன் என்றும் தொழில் அதிபர் ஸ்ரீதர்வேம்பு கூறினார்.
இலவச மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம், கடையம் அருகே கோவிந்தப்பேரியில் ஸோஹோ நிறுவனத்தின் கலைவாணி கல்வி மையம், சுகம் ஹெல்த் கேர் இணைந்து முழு உடல் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே பாண்டியன் தலைமை வகித்தார் . முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜா துரை பாண்டியன், வார்டு மெம்பர் இசக்கி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைவாணி கல்வி மையம் முதல்வர் அக்ஷயா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் சுடலைமுத்து, மாரிதுரை, வேல்மயில், முருகன், முருகாட்சி, மதியழகன் ,கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் பகுதிகளை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஸ்ரீதர் வேம்பு
இந்த முகாமினை ஸோஹோ ஐடி நிறுவனரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழு உறுப்பினருமான ஸ்ரீதர் வேம்பு துவக்கி வைத்தார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
அனைவருக்கும் அடிப்படை கல்வியும் மருத்துவம் கிடைக்க வேண்டும், நமது மாவட்டத்தின் மக்கள் தொகைக்கு ஈடான ஐரோப்பியா கண்டத்தில் உள்ள இஸ்டோனியா என்னும் நாட்டிலும் 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டில் அனைவருக்கும் கல்வியிலும், சுகாதாரத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்து உலக நாடுகளுக்கு முன்னோடியாக முதன்மை நாடாக திகழ்வது போல நமது தென்காசி மாவட்டம் அனைத்து துறைகளிலும் இந்தியாவில் முதல் மாவட்டமாக மாற நான் அனைத்து துறைகளிலும் முன்னேறுவதற்கு முக்கியமாக கல்வித்துறைக்கு உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.