May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிப்பு

1 min read

Increase in income tax ceiling from Rs.5 lakh to Rs.7 lakh

1/2/2023
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்

புதுடெல்லி நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எளிதாக ரிட்டர்ன் தாக்கல் செய்ய புதிய ஐடி ரிட்டர்ன் படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம் 16 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

வருமான உச்சவரம்பு

ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிப்பு நடப்பாண்டு 6.5 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு
ரூ.0-3 லட்சம் வருமானம் – வரி இல்லை.
ரூ.3 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.6 லட்சம் மற்றும் ரூ.9 லட்சம் வரை வருமானம் இருந்தால் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.
ரூ.12 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும் 15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.