May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே விளை நிலங்களில் புகுந்த காட்டு யானை

1 min read

A wild elephant has entered the farmlands near Kadayam

1.2.2023
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு, காட்டுப்பன்றி, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
கடையம் வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.

யானை

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் ஒற்றைக்காட்டு யானை புகுந்துள்ளது. அங்குள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை, வாழை, நெல் பயிரை சேதப்படுத்தியது. மேலும் ஒரு வீட்டு வேலியை சேதப்படுத்தியது.
இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த கடையம் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
ஆனாலும் அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்துடனேயே இருந்து வருகிறார்கள். எனவே வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க அந்த பகுதியில் சோலார் மின்வேலியை பராமரிக்க வேண்டும், அகழியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.