June 18, 2024

Seithi Saral

Tamil News Channel

சினிமா இயக்குனநர் டி.பி.கஜேந்திரன் மரணம்

1 min read

Film director DP Gajendran passed away

4.2.2023
இயக்குனநர் டி.பி.கஜேந்திரன் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

டி.பி.கஜேந்திரன்

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன்(வயது68). இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் டி.பி. கஜேந்திரன். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மரணம்

இந்த நிலையில வயது மூப்பு காரணமாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடு உள்ளது. அங்கு தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் இருவரும் இயக்குனநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.