June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

1 min read

Protest demonstration by Marxist-Communist in Sivagiri

17.5.2024
தென்காசி மாவட்டம் சிவகிரியில் நெல்லை மார்க்சிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததை கண்டு ஆத்திரம் அடைந்த ஒரு பிரிவினர் மாவட்ட குழு அலுவலகத்தை தாக்கி சூறையாடியதை கண்டித்து அவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் சாதி ஆணவபடுகொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றிய குழு சார்பில் சிவகிரி காந்தி கலை அரங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள்அமல்ராஜ் ,கண்ணன் உள்ளிட்டோர் பேசினர் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிவசுப்பிரமணி யன் சுப்புலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, பூல் பாண்டியன், மற்றும் கிளைச் செயலாளர்கள் குருசாமி, சக்திவேல், ரவீந்திரநாத், பாரதி, முத்துமாரி, வெள்ளத்துரை, ஜெயபால், துரை, சுப்பையா, மற்றும் மூத்த தோழர்கள் ஜெயராஜ், மருதைய்யா, கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *