May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

சீமான் சர்ச்சை பேச்சு: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க உத்தரவு

1 min read

Seeman Controversy Speech: Naam Tamil Party candidate ordered to reply within 24 hours

22/2/2023
சீமான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க
தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சீமான் பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை இதனை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த வாரம் முதல் கட்ட பிரச்சாரம் செய்தார். கடந்த 13 ஆம் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளித்தது.
இதை எடுத்து கடந்த 18ஆம் தேதி இரவு நாம் தமிழர் கட்சியினர்ராஜபுரம் பகுதிக்கு சென்றனர் அப்போது அவர்களை வாக்கு கேட்டு வரக்கூடாது என்று பொதுமக்கள் சிலர் தடுத்தனர் . இதனால் கட்சியினர் பொதுமக்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அன்பு தென்னரசு என்பவர் மண்டை உடைந்தது. இதனால் பதட்டம் ஏற்பட்டது போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
மறுநாள் 19ஆம் தேதி சீமானை கைது செய்யக்கோரி திருநகர் காலனியில் பொதுமக்கள் சிலர் சாலை மறியல் செய்தனர் தொடர்ந்து சீமானுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டது.

விளக்கம் அளிக்க ..

இந்நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சீமான் மீது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் இடம் புகார் செய்தனர். இந்நிலையில் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி ஈரோடு தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது “சாதி மத உணர்வுகளை தூண்டும் வகையில் சீமான் பேசியிருப்பதாக புகார் வந்துள்ளது. எனவே இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அவர் அளிக்கும் பதிலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.