May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

இன்ஸ்ட்டாகிராம் மூலம் திருமண ஆசை காட்டி பரமக்குடி பெண்ணிடம்- ரூ 54.60 லட்சம், 15 பவுன் தங்க நகை மோசடி

1 min read

Rs 54.60 lakh, 15 pound gold jewelery scam from Paramakudi woman who pretended to marry her on Instagram

22.2.2023
இன்ஸ்டாகிராம் மூலம் பரமக்குடி பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ 54.60 லட்சம், 15 பவுன் தங்க நகை மோசடி செய்ததாக ஈரோடு வாலிபர், பெற்றோர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருமண ஆசை

பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஜோசப் ராஜ் – ஆரோக்கிய மேரி. இவரது மகளை ஈரோட்டைச் சேர்ந்த விஜய் 2020 ம் ஆண்டு முதல் 2022 மே மாதம் வரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின்பு அவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பரமக்குடியில் உள்ள பெண் வீட்டிற்கு வந்து ஜோசப்ராஜ் – ஆரோக்கிய மேரியின் மகளை திருமணம் செய்து கொள்ள ரூ 60 லட்சம் ரொக்கமும்,100 பவுன் தங்க நகைகளை வரதட்சனையாக கேட்டு இரு வீட்டாரும் பேசி சம்மதித்து உள்ளனர்.

பின்பு பல தவணைகளில் விஜய்யின் வங்கி கணக்கின் மூலம் ரூ 44 லட்சத்தி 60 ஆயிரத்து 997 ம், நேரில் ரொக்க பணம் ரூ 10 லட்சமும் ஆக மொத்தம் ரூ 54 லட்சத்தி 60 ஆயிரத்தி 997 ம், 15 பவுன் நகைகளை வரதட்சனையாக பெற்றுள்ளார். மேலும் பெண்ணின் தாயார் ஆரோக்கிய மேரிக்கு சொந்தமான காரை விஜய் எடுத்துச் சென்றுள்ளார்.

மோசடி

தொடர்ந்து அவர் ஆரோக்கிய மேரியின் கையெழுத்தை போலியாக போட்டு போலி ஆவணங்கள் தயார் செய்து அதன்மூலம் விஜய் தனது பெயருக்கு காரை மாற்றி மோசடி செய்துள்ளார்.

இதையறிந்த ஆரோக்கிய மேரி இதுகுறித்து விஜயிடம் கேட்டபோது அவரை தகாத வார்த்தைகளால் பேசிதுடன், அவரது மகளின் தலைமுடியை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் பேசி திருமணத்தை பற்றி பேசினால் குடும்பத்தோடு வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இது குறித்து ஆரோக்கிய மேரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினர் ஈரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விஜய், தந்தை கோவிந்தராஜ், தாயார் சாவித்திரி, சகோதரர் முருகேஷ் என்ற வருண்,சகோதரி சங்கீதா மற்றும் உறவினர்கள் வைத்தீஸ்வரன்,ரவிக்குமார்,பிரீத்திமனுவேல் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.