குரூப் 2 மெயின் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
1 min read
Edappadi Palaniswami urges to cancel Group 2 Mains exam
27.2.2023
குரூப் 2 தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
குரூப் 2 தேர்வு
குரூப் 2 தேர்வு தாமதம் காரணமாக பல முறைகேடு நடந்ததால் தகுதி வாய்ந்த தேர்வர்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறியது உள்ளிட்ட பல குளறுபடிகளால் தாமதமாக தேர்வு நடைபெற்றது.
டிஎன்பிஎஸ் சி போன்ற முக்கிய தேர்வுகளை கையாள தெரியாத திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே குரூப்-2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்து உரிய முறையில் மறுதேர்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.