அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர் ஆளுநர்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
1 min read
Governor subject to cabinet decision: Supreme Court view
28/2/2023
அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர் ஆளுநர்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
அனுமதி மறுப்பு
பஞ்சாப் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி வழங்காததை எதிர்த்து அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என ஏற்கனவே பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பாக வழங்கி உள்ளது
அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதனை மாநில ஆளுநர் தவறாமல் ஏற்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், பஞ்சாப் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதை மாநில ஆளுநர் தாமதப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது மாநில முதல்-மந்திரி மற்றும் ஆளுநர் இருவரும் அரசியல் சாசன கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அரசியல் ரீதியாக கொள்கைகளில் வித்தியாசப்படுவது வேறு, அதே நேரத்தில் வேலை என்று வரும்போது எந்த வேறுபாடும் காட்டாமல் வேலை செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.