June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்

1 min read

Test run of high speed train between Nellai, Tenkasi-Thiruchendur

6.3.2023
நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோமீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட இருக்கிறது. வருகிற 9-ந்தேதி நெல்லையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் அதிவேக ரெயிலானது 10.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. சோதனை முடிந்த பின் நெல்லையில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், நெல்லை-சென்னை இடையே இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதால் 8 மணி நேரத்தில் சென்னை செல்லும் வகையில் பகல் நேர தேஜாஸ், வந்தே பாரத் போன்ற ரெயில்கள் இயக்க வேண்டும் என்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *