இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு
1 min read
12 fishermen captured by Sri Lanka Navy
12/3/2023
இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் சிறைபிடித்தனர். இதனை அறிந்த அவர்களது குடும்பத்தார் கண்ணீர் விட்டு அழுதனர்.
சிறைபிடிப்பு
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் சா இவருக்கு சொந்தமான விசைப்படகில் இருந்து கடந்த 7-ம் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைபேட்டையை சேர்ந்த ஆனந்தமணி (44), ராஜா (32), வீரையன் மகன் ரவி (48), மதிபாலன் (36), காத்தலிங்கம் (50),ராமமூர்த்தி (38), அன்பு (32), வேல்மயில் (48), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரகு (38), தினேஷ்(26), சித்திரவேல் (42) ஆகிய 12 பேர் விசை படகில் சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரையும் கைது செய்தனர். மேலும் விசைப்படகை பறிமுதல் செய்தனர். அவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் உறவினர்கள் நாகை அக்கரைப்பேட்டை துறைமுகம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை மீட்க வேண்டும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழ்வாதாரமாக திகழும் படகுகளையும் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தால் விடுவிக்க வேண்டும். மாநில அரசு தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் இது போன்ற கைது நடவடிக்கை தொடர கூடாது. கடலில் மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.