May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருகேபோலி பத்திரம் தயாரித்து அபகரிக்கப்பட்ட நிலம் மீட்பு

1 min read

Recovery of land seized by preparing fake deed near Courtalam

28.3.2023
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 17 செண்ட் நிலத்தை அபகரித்து போலி பத்திரம் மூலம் விற்பனை செய்த நிலத்தை தென்காசி மாவட்ட எஸ்.பி சாம்சன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார் இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நிலம் அபகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவருக்கு பாத்தியப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 17 செண்ட் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த சுடலைமுத்தம்மாள் என்பவர் முருகன் மற்றும் லெட்சுமி ஆகியோருக்கு போலி பத்திரம் மூலம் பத்திர பதிவு செய்து, பின்னர் அவர்கள் பாக்கியலெட்சுமி என்பவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து சுப்பிரமணியன் 15.02.23 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சந்திச்செல்வி மற்றும் சார்பு ஆய்வாளர் மாரிசெல்வி ஆகியோர் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி போலி ஆவணம் ரத்து செய்ததோடு, மீட்கப்பட்ட நிலத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் அந்த நிலத்தின் உரிமையாளர் கண்டமங்கலம் சுப்பிரமணியன் வசம் ஒப்படைத்தார்.

பாராட்டு

இந்த பிரச்சனையில் சிறப்பாக செயல்பட்டு நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு
காவல் ஆய்வாளர் சந்திச்செல்வி மற்றும் சார்பு ஆய்வாளர் மாரிசெல்வி ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

-முத்துசாமி, தென்காசி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.