தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் கடையத்தில் நின்று செல்ல தோரணமலை பக்தர்கள் கோரிக்கை
1 min read
Request by Thoranamalai devotees to stop at the Thambaram-Sengottai express station
17.4.2023
தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் கடையத்தில் நின்று செல்ல தோரணமலை பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில்
தென்னக ரெயில்வே தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்குகிறது. இந்த ரெயில் போக்குவரத்தை சென்னையில் கடந்த 8ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் தற்போது வாரம் ஒரு முறை இயக்கப்பட்டாலும் வரும் ஜூன் மாதம் முதல் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரெயில் கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் நிற்பது இல்லை. கடையத்தில் புகழ்பெற்ற தோரணமலை கோவில் உள்ளது. தற்போது இந்தக் கோவிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தாமிர பரணி எக்ஸ்பிரஸ் பல ஊர்கள் வழியாக வருவதால் தோரணமலைக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதற்கு வசதியாக எக்ஸ்பிரஸ் கீழக்கடையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று தோரணமலை பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ரெயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மேலும் கீழக்கடையம் ரெயில் நிலையத்தில்தான் மகாகவி பாரதியார் பாரத மாதாவுக்கு முத்தமிட்டார். இந்த சரித்திர நிகழ்வு நடந்த இடம். மேலும் கடையத்தில் பாரதியார் நினைவாலயமும் உள்ளது. அதை பார்க்கவும் பாரதி உலாவிய இடத்தை பார்க்க வருவார்கள். எனவே இந்த ரெயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் குறிப்பி்ட்டு உள்ளனர்.
கடையத்தை சுற்றி பல கிராமங்கள் இருக்கின்றன. அவர்கள் இங்கிருந்த சென்னை் செல்லுவதற்கு வசதியாக இங்கே எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும் என்று கடையம் பொதுமக்களும் கோரி்கை விடுத்தனர்.