ஹெலிகாப்படலில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு சென்றாரா?- அண்ணாமலை பதில்
1 min readDid he carry money in a helicopter? – Annamalai Answer
19.4.2023
கர்நாடகத்திற்கு அண்ணாமலை கட்டுக்கட்டாக பணம் கொண்டு சென்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
ஹெலிகாப்டரில் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் பணிக்காக அண்ணாமலை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். பெரும்பாலும் காரில் பயணிக்கும் அவர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி வந்தார்.
அண்ணாமலை தனது ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
நேர்மையானவர்கள்
நாங்கள் நேர்மையானவர்கள். அவதூறு பரப்பும் காங்கிரசார் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். பா.ஜ.க.வுடன் போட்டியிட பயந்துதான் சொரகே இப்படி பேசுகிறார். கப்பு தொகுதியில் எங்கள் வேட்பாளர் குர்மே சுரேஷ் ஷெட்டி வெற்றி பெறுவது உறுதி. நான் ஹெலிகாப்டரில் வந்தது உண்மைதான். உடுப்பியிலிருந்து அவசரமாக 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது. சூல்யா, தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்று தூரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.