June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

குருப்பெயர்ச்சி பலன்கள்2023/ விருச்சிகம்

1 min read

Guru peyarchi Palalnkal 2023./ Viruchigam/ Scorpio

விருச்சிக ராசியின் சின்னம் தேள். அதனை யாரும் சீண்டாதவரை அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் சீண்டினால் கொட்டிவிடும். அதே போல் உங்களுக்கு யாரேனும் தீங்கு செய்துவிட்டால் அதனை ஒருபோதும் மறக்காத குணம் கொண்டவர்கள் நீங்கள்.இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்தார். அவரால் குடும்பம் மேம்பட்டிருக்கலாம். நல்ல பணப் புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளை-களால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் எண்ணற்ற முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள்.
இந்த நிலையில் இப்போது குரு பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 5-ம் இடத்தில் இருந்தது போன்ற நன்மைகளை அவரால் கொடுக்க முடியாது. அதே நேரம் மிகவும் பிற்போக்கான பலனையும் அவர் தரமாட்டார். பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வைக்கு கோடி நன்மைகள் உண்டு என்பார்கள். குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் அவர் 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில்சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குரு வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
மற்றகிரகங்களின் நிலை
கோச்சாரபலனை கணிக்கும்போது மற்ற கிரகங்- களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவானின் உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மகரத்தில் இருப்பது மிகச்சிறப்பானதாகும். அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்திருப்பார். பொருளாதார வளத்தை மேம்படுத்திருப்பார். தொழிலில் சிறந்தோங்க செய்திருப்பார். இந்த நிலையில் சனிபகவான் 20-12-2023 அன்று கும்ப ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார்.இது அவ்வளவு சிறப்பான இடம்என்று சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் இருக்கும் போது சனிபகவான் குடும்பத்தில் வீண்விரோதத்தை கொடுப்பார்.ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.- இவை எல்லாம் பொதுவான பலன். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை மிகச்சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிக சாதகமான நிலை.
ராகு தற்போது 6-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். காரிய அனு கூலத்தைக் கொடுப்பார். மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வையால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். அவர் 8-10-2023அன்று 5-ம் இடத்திற்கு வருவதால் நன்மைகள் தரமாட்டார். இன்னல்களையும், இடையூறுகளையும் அவர் தரலாம்.மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப்படைக்கலாம். ஆனால் அப்போது அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கன்னி ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
கேது தற்போது 12-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். 8-10-2023அன்று அவர் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கன்னி ராசிக்கு போகிறார்.அவர் நல்ல வளத்தை கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் கொடுப்பார். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
குருபகவான் 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு செல்வதால் அவரால் முன்போல் நன்மை செய்ய முடியாது ஆனால் அவரது 9-ம் இடத்துப் பார்வை சாதகமாக அமைந்துள்ளன. இதனால் நன்மைகள் நடக்கும். எந்த பிரச்சினையை -யும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். மேலும் ராகுவும் பல்வேறு முன்னேற்றங் -களை தருவார்கள். இதனால் நன்மைகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்படையும். பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். தடைகள் விலகும். இதனால் ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும்.
குடும்பம்: உங்கள் செல்வாக்கு வெளியே எப்படி இருந்தாலும் வீட்டில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும்.
உத்தியோகத்தில் பளுவும்,அலைச்சலும் இருக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். மேல அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வெளியூர் வாசம் நிகழும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். குருவின் பார்வையால் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை.செலவை குறைத்து சிக்கன -மாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வேலையில் அதிக பளுவும் அலைச்சலும் இருக்கும். உங்களுக்கு வரும் பிரச்சினைகள் அனைத்தும் குருவின்பார்வையால் இருக்கும் இடம் தெரியாமல் போகும். வக்கீல்கள் கவனமுடன் இருக்கவும். எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு. தொழிலில் பண வரவு இருக்கும். மருத்துவர்கள் அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறை- வேறும். உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும்.
வியாபாரம் இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பணவிரையம் ஏற்படலாம். வாடிக்கையாளரை அதிக முயற்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும். குருவின்9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். தரகு,கமிஷன் தொழில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் தவிடுபொடி ஆவார்கள்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சீராக கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். சமூகநலசேவககர்களுக்கு எதிர்- பார்த்த பதவி கிடைப்பது அரிது. அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்.பின்நாளில் அதற்கான பலன் கிடைக்கும். சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுவது நல்லது. குருவின் பார்வையால் தேர்வுகள் சிறப்பாக எழுதுவீர்கள்.
விவசாயம் சீராக இருக்கும். உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவை குறையுங்கள். ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறஇயலாது.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். பெண் காவலர்களுக்கு சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் கருணைபார்வை கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்ட வேண்டியது இருக்கும்.
பரிகாரம்- ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டக்குடி, பட்டமங்கலம் போன்ற ஏதாவது ஒரு குருத்தலத்திற்கு சென்று வாருங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வசதி படைத்தவர்கள் ஏழைகள் பிழைக்க ஆடு வாங்கி கொடுத்து உதவி செய்யலாம்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
இந்த காலக்கட்டத்தில் ராகு மீன ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மைகள் தர இயலாது. அவர் சாதகமற்ற இடத்திகு சென்றாலும் கவலைகொள்ள தேவை இல்லை காரணம் கேது சாதகமானஇடத்திற்கு சென்று நற்பலனை தருவார். மேலும் ராகுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கன்னி ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு சனிபகவான் சாதகமற்ற இடத்திகு சென்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது 3-ம் இடத்து பார்வையால் நன்மை கிடைக்கும்.
கேதுவின் பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. நல்ல பணப்புழக்கம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பகைவர்களின் தொல்லையில் சிக்கி அலைக்கழிந்தவர்கள் இனி தைரியமாக செயல்-படும் ஆற்றல் பெறுவீர்கள்.தேவைகள் பூர்த்தியாகும். வீடு,மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த காரியம் அனுகூலம் ஆகும். சனிபகவான் சாதகமற்ற இருப்பதால் பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. ஆனாலும் அவரது பார்வையால் முயற்சிகளில் வெற்றியை தருவார். அண்டை வீட்டார்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவும். குருவின் பார்வையால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல சிறப்பான வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். ராகுவின் பார்வையால்பண வரவு இருக்கும். பொன்,பொருள் கிடைக்கும்.மகிழ்ச்சியும்,ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உத்தியோகத்தில் போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு சனி மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். இருப்பினும் குருவின்பார்வையால் கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகர -மாக இருப்பர். ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை
மருத்துவர்களுக்கு இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். வக்கீல்கள் புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது சற்று கவனம் தேவை.
வியாபாரம் அதிக வருமானத்தைக் காணலாம். புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். கேதுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள்.டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
தரகு,கமிஷன் தொழில் உங்கள் முயற்சிகளில் தடை ஏற்படும். பொருள் விரையம், நஷ்டம் உருவாகலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சமூகநல சேவகர்கள், வளர்ச்சி காண்பர். நல்ல அந்தஸ்தில் இருப்பர் புகழ், பாராட்டு வரும். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும்.
மாணவர்கள் அயராது உழைக்க வேண்டியதிரு -க்கும் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும்.சோம்பல் உங்களை பின்தங்கிய நிலைக்கு தள்ளலாம். இருப்பினும் குருவின் பார்வையால் போட்டி பந்தயங்ளில் வெற்றி காண்பர். ஆசிரியர்கள் ஆலோனைபடி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
விவசாயம் சிறப்படையும்.நெல்,சோளம் ,கொள்ளு, துவரை போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும்.கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமான- த்தை பெறுவர். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியது இருக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன்கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடிவரும்.11-9-2023 முதல்4-12-2023 திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மேல்அதிகாரிகளின் ஆதரவும் அனுசணையும் வந்து சேரும். உடல்நலம் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் அடைவர்.
பரிகாரம்: சனி மற்றும் ராகு இருப்பிடம் சிறப்பானது அல்ல என்பதால் நீங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்களுக்கு பரிகாரம் செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு சாப்பிடுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *