May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது-தேசிய தேர்வு முகமை தகவல்

1 min read

NEET is being held in 499 cities across the country – National Examinations Agency information

1/5/2023
நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு

மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் ‘நீட்’ தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் NTA NEET அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.neet.nta.nic.in அல்லது www.nta.ac.in இல் தங்கள் தேர்வு மைய நகர தகவலை தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு மே 7 ஆம் தேதி மதியம் 2:00 முதல் 5:20 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.