புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை- இன்று ரூ.46 ஆயிரம் ஆனது
1 min readGold price touched a new high- Rs.46 thousand today
4.5.2023
தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. இன்று ரூ.46 ஆயிரம் ஆனது
தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே விலை அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் படிப்படியாக உயர்ந்து கடந்த மாதம் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 1 மாதமாக தங்கம் விலை ரூ.44 ஆயிரம், ரூ.45 ஆயிரம் என்ற விலையிலேயே உயர்வதும், குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
இன்று 1 பவுன் தங்கம் ரூ.46 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45,648 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46 ஆயிரமாக உயர்ந்துள்ளது. முதல் முறையாக தங்கம் விலை பவுன் ரூ.46 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,706-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.5,750-க்கு விற்கப்படுகிறது.
இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.8180-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.82.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.82,800-க்கு விற்பனையாகிறது.