32 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
1 min readAfter 32 years Sirkazhi Chattainathar Swamy Temple Kumbabhishekam
24.5.2023
32 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் லட்சகணக்கான் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சீர்காழி கோவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர், உமாமகேஸவரி அம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் 3 நிலைகளில் காட்சி தருகின்றனர்.
திருஞானசம்பந்தர் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய அற்புத ஸ்தலமாகும். காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் தெற்குகோபுரம் அருகே தனி சன்னதியில் காட்சி தருகின்றனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முடிவு செய்து அதற்கான திருப்பணிகள் தொடங்கி ரூ.20கோடி செலவில் நடைபெற்று வந்தது.முத்து சட்டைநாதர் சுவாமி,திருஞானசம்பந்தருக்கு கருங்கல் மண்டபம்,கருங்கல் பிரகாரங்கள், மேள்தளம் புதுப்பித்தல்,வர்ணபூச்சு என திருப்பணிகள் சிறப்பாக நடந்து முடிந்து.
கும்பாபிஷேகம்
கடந்த சனிக்கிழமை 8 கால யாகசாலை பூஜைகள் 11 பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இன்று நான்கு கோபுரங்கள்,சுவாமி அம்மன் விமான கலசங்கள்,மலைக்கோயில் விமான கலசம் உள்ளிட்டவைகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை செளந்தர்ராஜன், பல்வேறு மடத்து ஆதீனங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு, செளந்தர்ராஜன் , அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சீர்காழி தமிழ்ச் சங்கத் தலைவர் மார்கோனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஹெலிகாப்டர்
கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது மேலும் புனிதநீர் தெளிக்கப்பட்டது கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை எஸ் பி நிஷா தலைமையில் பல்வேறு மாவட்ட எஸ்பிக்கள் காவல்துனை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுப்பட்டனர்.