பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் செங்கோலை வழங்குகிறார்
1 min readAt the inauguration of the Parliament Building Thiruvavaduthurai Atheenam presents scepter to Prime Minister Modi
25.5.2023
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் செங்கோலை வழங்குகிறார்.
செங்கோல்
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோலை,தற்போது புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின் போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்க உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்*
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சுதந்திரத்தை அடையாளப்படுத்தும் விதமாக திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து தங்கத்தில் செங்கோல் செய்து அதனை ஆதீன தம்பிரான் சுவாமிகள் அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார்.
ஆதினம்
இந்த செங்கோல் தற்போது அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில்,வரும் 28 ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டடம் திறக்கப்படும் போது அந்த செங்கோலினை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்க உள்ளார்.
இது குறித்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் 24-வது குருமகா சந்நிதானம் பாராளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் அப்போது அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அந்த தங்க செங்கோலை பாரத பிரதமரிடம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.