புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
1 min readCase in Supreme Court for President to open new Parliament building
25.5.2023
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெய் சுக்தேவ் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.
புதிய பாராளுமன்ற கட்டிடம்
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளது. ஜெய் சுக்தேவ் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதி திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.