சிதம்பரத்தில் இருவிரல் சோதனை விவகாரம்; குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விசாரணை
1 min readNational Child Protection Commission member probe in Chidambaram
25.5.2023
கடலூர் மாவட்டம சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குடும்பசிறுமிகளுக்கு இளம் வயது திருமணம் நடை பெற்றதாகவும், அவர்களுக்கு அரசால் தடை செய்யப்பட்ட கன்னித்தன்மையை பரிசோதிக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்ட தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று (புதன்கிழமை) நேரில் விசாரணை நடத்தினார்.
சிதம்பரத்துக்கு வந்த அவரை கடலூர் மாவட்ட ஆட்சியர் (பொ) ராஜசேகரன், மாவட்ட ஏஸ்பி. ராஜாராம்,சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி,உதவி ஆட்சியர் சுவேதாசுமன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர்,தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார்.இதையடுத்து, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று மாவட்ட எஸ்.பி. ராஜாராம்,மாவட்ட ஆட்சியர் (பொ)ராஜசேகரன் மற்றும் இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமிகளின் வீடுகளுக்கு சென்று அந்த சிறுமிகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும் தனியாக விசாரணை மேற்கொண்டு பதிவு செய்தார் அப்போது கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன் உடன் இருந்தார் பின்னர் ஆர்.ஜி. ஆனந்த் செய்தியாளரிடம் அளித்த பேட்டி:-தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சீரார் திருமண வழக்கு என்ற பெயரில் சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்ப சிறுமிகள் துன்புறுத்தப்படுவதாக பேட்டி அளித்தார் இதை தானாக முன்வந்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனூங்கோ உத்தரவிட்டு, தமிழக தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து, தமிழக தலைமைச் செயலரிடமிருந்து அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கை சரியா என்பதை விசாரிக்க வந்தேன்.தற்போது 3 கட்ட விசாரணை நடத்தினேன். இந்த விசாரணை அறிக் கையை ஆணையத் தலைவரிடம் விரைவில் அளிக்க உள்ளேன். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.சிறுமிகளிடம் விசாரணை செய்தபோது, இளம் வயது திருமணம் நடைபெறவில்லை என்றும். தங்களை வற்புறுத்தியதால் திருமணம் நடைபெற்றதாக ஒப்புக்கொண்டதாக கூறினர்.குழந்தைகள் எந்தவிதத்தில் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.நாமக்கல் மாவட்ட சிறார்கள் நீரில் மூழ்கி இறந்தது குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.சிறுமிகளிடம் அரசால் தடை செய்யப்பட்ட இரு விரல் நடைபெற்றதற் கான ஆதாரம் இல்லை என்றார் அவர்.